Skip to main content

Corona: டெல்லியில் நிலைமை இப்படியா ? நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர்

Apr 20, 2020 384 views Posted By : Sooriyan TV
Image

Corona: டெல்லியில் நிலைமை இப்படியா ? நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, புதுடெல்லி, தமிழ்நாடு ஆகிய பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.



மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐக் கடந்த நிலையில், தற்போது புதுடெல்லியிலும் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐத் தாண்டியுள்ளது.



அதே போல, இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 45 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து பாதிப்பானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,003 ஆகவும், பலி எண்ணிக்கை 45 ஆகவும் உயர்ந்துள்ளது.



வயதுக் கணக்கீட்டின்படி, பலியானவர்களில் 25 பேர் 60 வயதினை கடந்தவர்கள் என்பதுடன், நேற்று ஒன்றரை மாத குழந்தை ஒன்றும் கொரோனாவுக்கு பலியானது டெல்லி பிராந்தியம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.





இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இதுதான் என்றும் கருதப்படுகிறது. பாதிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் துக்ளகா பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் 78 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.



தலைநகர் டெல்லியில் நிலைமை இப்படி மேலும் மேலும் மோசமடைந்து வருவது பெரும் கவலைக்குரிய செய்தியாக உள்ளது. தப்லிகி ஜமாத், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் கூட்டம் என டெல்லி பாடுபட்டு வருகிறது.



இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தற்போது கூடுதலாக மருத்துவர்களும் மருட்துவப் பணியஆளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆறு மருத்துவ அதிகாரிகள், 18 துணை மருத்துவர்கள் உள்ளிட்ட, 40 பேர் கொண்ட, ராணுவ மருத்துவ குழுவினர் ஏற்றுள்ளனர். நரேலா மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கி இந்தக் குழு பணியாற்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Image

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை