Skip to main content

போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டி - ஆர்.என்.ரவி

Jan 28, 2024 30 views Posted By : YarlSri TV
Image

போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டி - ஆர்.என்.ரவி 

நமது தேசத்தின் சுதந்திரத்துக்காக நேதாஜி வழங்கிய பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விரிவாக கூற முயன்றேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி



சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் கடந்த 23-ம் தேதி நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்



அப்போது பேசிய அவர், "1942-க்குப் பிந்தைய காலகட்டத்தில் காந்தியின் தலைமையிலான தேசிய சுதந்திர இயக்கம் செயலற்றதாக இருந்தது. நேதாஜி இல்லாமல் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது. நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை" என்று பேசினார் . 



ஆளுநர் ரவியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். 



இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். தமது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும்,  தவறான தோற்றத்தை உருவாக்க முயல்வதாகவும்  கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிகக்கையில்,  “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன.  நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் இலட்சியங்களாக இருக்கின்றன.



ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சிற்கு ஒரு திருப்பம் கொடுத்தன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன்.



1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும், செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள் ஆகிய இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்று நான் ஒரு கருத்தை முன்வைக்க முயற்சித்தேன். பிப்ரவரி 1946 இல் கிளர்ச்சிகள் நடந்தன, அடுத்த மாதம் மார்ச் 1946 இல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்து, தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ச்சியடைந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியலமைப்பு சபையை அமைத்தனர். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை