Skip to main content

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது!

Jan 09, 2024 33 views Posted By : YarlSri TV
Image

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது! 

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் இன்று (09)  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர் 



இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது.



இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. 



இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 



இதேவேளை பப்புவா நியூ கினியாவின் வடகடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.



நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் இதனால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

14 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை