Skip to main content

மருத்துவப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

Jan 09, 2024 35 views Posted By : YarlSri TV
Image

மருத்துவப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்! 

நாட்டிலுள்ள பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை  ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.



பலதரப்பட்ட  கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுதுள்ளனர்.



இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 



 கொடுப்பனவு 

இதேவேளை பாரபட்சமின்றி அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க அதிபரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



அதன்படி, (DAT) கொடுப்பனவை ரூ.35,000 லிருந்து ரூ.70,000 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை