146 வருட கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறை.. விராட் கோலி !
Dec 29, 2023 19 views Posted By : YarlSri TV
146 வருட கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறை.. விராட் கோலி !
146 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார்விராட் கோலி.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும், விராட் கோலி முதல் இன்னிங்க்ஸில் 38 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 76 ரன்களும் சேர்த்தார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார்.
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என இரண்டிலும் சேர்த்து விராட் கோலி இந்த ஆண்டு 2048 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1377 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 671 ரன்களும் சேர்த்துள்ளார். விராட் கோலி ஏழாவது முறையாக ஒரே ஆண்டில் 2000 சர்வதேச ரன்களை குவித்து இருக்கிறார்.
அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய 1877ஆம் ஆண்டு முதல் சுமார் 146 ஆண்டுகளில் எந்த வீரரும் ஏழு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை கடந்ததில்லை.
விராட் கோலி எந்தெந்த ஆண்டுகளில் 2000 ரன்களை கடந்து இருக்கிறார்? 2012 - 2186 ரன்கள் 2014 - 2286 ரன்கள் 2016 - 2595 ரன்கள் 2017 - 2818 ரன்கள் 2018 - 2735 ரன்கள் 2019 - 2455 ரன்கள் 2023 - 2048 ரன்கள் முன்பு குமார் சங்ககாரா ஆறு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை குவித்து இருந்தார்.
அந்த சாதனையை 2019-லேயே சமன் செய்து இருந்த விராட் கோலி, தற்போது அதை முறியடித்து இருக்கிறார். இதைத் தவிர தென்னாப்பிரிக்க மண்ணில் அனைத்து விட கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி
தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் 38 போட்டிகளில் 1724 ரன்கள் குவித்து இருக்கும் நிலையில், விராட் கோலி 29 போட்டிகளில் 1750 ரன்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மனை முந்தி 21 ஆம் இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விவிஎஸ் லக்ஷ்மன் 8781 ரன்கள் குவித்துள்ள நிலையில், விராட் கோலி தற்போது 8790 ரன்கள் குவித்து இருக்கிறார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago