பிரின்ஸ் படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டார் - சிவகார்த்திகேயன்
Dec 28, 2023 50 views Posted By : YarlSri TV
பிரின்ஸ் படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டார் - சிவகார்த்திகேயன்
கடந்த 2022ல் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கினார்.
இவர் இயக்கத்தில் இதற்குமுன் தெலுங்கில் வெளிவந்த ஜாதி ரத்னலு திரைப்படம் மாபெரும் வெற்றியைந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்தார்.
இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு கூட இப்படம் பெரிதளவில் பிடிக்கவில்லை. இதனால் பிரின்ஸ் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், அயலான் படத்திற்காக பேட்டி கொடுத்திருந்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் தோல்வி குறித்து பேசினார். 'பிரின்ஸ் படம் சிலருக்கு பிடித்தது. ஆனால், அந்த படத்தின் மிகப்பெரிய தவறு நான் தான் என நினைக்கிறன். எனக்கு பதிலாக வேறொரு இளம் நடிகர் அல்லது வளர்ந்து வரும் நடிகர் நடித்திருந்தால் கண்டிப்பாக அப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து இருக்கும்' என கூறினார்.
முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய படத்தின் தோல்வியை ஏற்றுக்கொண்டு கொடுத்த விளக்கம் ரசிகர்கள் பலருக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago