Skip to main content

அ.தி.மு.க அனுமதிக்காது இ.பி.எஸ் உறுதி!

Feb 01, 2024 92 views Posted By : YarlSri TV
Image

அ.தி.மு.க அனுமதிக்காது இ.பி.எஸ் உறுதி! 

சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க ஒருபோதும் அனுமதிக்காது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகக் கூறியுள்ளார்.



சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க ஒருபோதும் அனுமதிக்காது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகக் கூறியுள்ளார்.



மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் ‘குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) இன்னும் 2 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும் என்று கூறினார். மத்திய இணை அமைச்சரின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.



சி.ஏ.ஏ சட்டம் குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க ஒருபோதும் அனுமதிக்காது.



சி.ஏ.ஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.



ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது தி.மு.க.



கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய தி.மு.க-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.



சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பா.ஜ.க எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் தி.மு.க-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அ.தி.மு.க என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளர்.



இதனிடையே, தமிழ்நாட்டினுள் சி.ஏ.ஏ-வை கால்வைக்க விடமாட்டோம் எனவும், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். தன்னுடைய உயிர் இருக்கும் வரை சி.ஏ.ஏ-வை அனுமதிக்க மாட்டேன் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.



https://twitter.com/EPSTamilNadu?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1752665966758998105%7Ctwgr%5E0a5fca6d407018dca1d5b7021e2f85a652209783%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.indianexpress.com%2Ftamilnadu%2Fedappadi-k-palaniswami-says-admk-will-not-allow-caa-to-affect-minorities-2432077


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை