Skip to main content

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

Nov 03, 2023 17 views Posted By : YarlSri TV
Image

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு 

இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுப்பதற்கு சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுத்துள்ளர்.



அலரி மாளிகையில் நேற்று  நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கடந்த வருடத்தில் தான் காலநிலை செழிப்புத் திட்டத்தை முன்வைத்திருந்ததாகவும், இவ்வருடத்துக்கான COP 28 மாநாட்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அறிவுத்துள்ளர். 



 “பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்து, நாங்கள் உருவாக்க முற்படும் பொருளாதாரம், போட்டித்தன்மை மிக்கதாகவும், டிஜிட்டல் மற்றும் வலுசக்தி, பசுமை துறைகளை மையப்படுத்தியதாகவும் அமைந்திருக்கும் என்று ஜனாதிபதி அறிவுத்துள்ளர்.



இதுகுறித்து வரவு செலவு திட்டத்தின் பின்னர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அறிவுத்துள்ளர். 



மேற்படி வழிமுறையின் ஊடாக மாத்திரமே இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும், விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல், சுற்றுலா வர்த்தகத்தை விரிவுபடுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் ஊடாக அதனை சாதிக்க முடியும் என்பதோடு, அதற்கான சாத்தியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கை சிறிய நாடு என்பதால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை