Skip to main content

வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

Oct 01, 2023 26 views Posted By : YarlSri TV
Image

வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஊடகவியாளர், (Photojournalist)  ஒருவர் தான் இரணைமடுவிற்கு செல்வதை  கடற்படையினர் தடுத்துவருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்



எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



இலங்கைக்கு நான் ஊடக பணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன். இரணைதீவிற்கு ஊடக படப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும் முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர்.



நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன்.



டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர் என்னை கேட்டுக்கொண்டனர்.



நான் முழங்காவிலிற்கு காலை 7.15 க்கு வந்து சேர்ந்தேன் - தற்போது 12 மணியாகிவிட்டது 



நான் குறிப்பிட்ட அதிகாரிகளிற்கு பல மின்னஞ்சல்களை அனுப்பிவிட்டேன்  அவர்கள் தொடர்ச்சியாக எனக்கு தவறான மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை