Skip to main content

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

Sep 28, 2023 35 views Posted By : YarlSri TV
Image

மகிந்தவின் உடல்நிலை மோசமா? 

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



மகிந்த ராஜபக்ச சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.



ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மகிந்த கலந்து கொள்ளவில்லை என்றும் , மகிந்த சுகவீனமுற்று இருந்ததன் காரணமாக கலந்து கொள்ளவில்லை எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டது.



அந்த  வகையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (27) பாமன்கடை ஸ்ரீமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை