Skip to main content

வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி

Sep 21, 2023 25 views Posted By : YarlSri TV
Image

வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி 

வங்களா விரிகுடா கடற்பரப்பில் உருவாகும் தாளமுக்கம் #சூறாவளியாக மாறும் என எதிர்வு கூறப்படுகிறது 



எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் (பெரும்பாலும் 01ஆம், 02ஆம், 03ஆம் திகதிகளில்) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு சூறாவளி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இது பெரும்பாலும் ஒரிசா மாநிலம் அல்லது ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



இதேபோன்று அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் (08ஆம் திகதி முதல் 15ஆம் திகதிகளுக்குள்) மேலும் ஒரு சூறாவளி அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதி உருவாகி அதுவும் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்றாவது வாரத்தில் (15ஆம் - 20ஆம் திகதிகளுக்குள்) மேலும் ஒரு தாழமுக்கம் உருவாகி ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இந்த நிகழ்வுகள் காரணமாக இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயற்சி காலநிலையை மேலும் அது வலுவடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



-கே.சூரியகுமாரன்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை