Skip to main content

இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!

Dec 25, 2023 30 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!  

சர்வதேச அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். போர்கள் நடைபெறும் இந்த நேரத்தில் மக்கள் நல் வாழ்விற்காகவும் உலக அமைதிக்காகவும் தேவ மைந்தனிடம் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.



ஆனால் அதேநேரம், இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும், பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக அங்குள்ள தேவாலய பாதிரியார்கள் கூறியுள்ளனர்.



 மேலும், இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார் என்று, காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து பாதிரியார்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்தீனியர்கள் இந்த போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை