Skip to main content

இடைக்கால தடை விதிக்கப்பட்ட எம்.பிகள் போராட்டம்!

Dec 23, 2023 33 views Posted By : YarlSri TV
Image

இடைக்கால தடை விதிக்கப்பட்ட எம்.பிகள் போராட்டம்! 

இந்திய பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது.



இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்த சம்பவம் இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எம்.பிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள். இரு அவைகளிலும் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.



இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்றி கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையின் செயல்பாடுகளில் பங்கேற்க இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.



தீர்மானத்தின் பிரகாரம் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களைவில் ஒரு எம்.பி. அமர்வுகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.



அமர்வுகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்பட்ட எம்.பிகள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கைகளில் பதாதைகள் ஏந்தியவாறு இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



‘‘பாராளுமன்றத்தில் பேசியதற்காக எங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பா.ஜ.க எம்.பி. மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஏன் மவுனம் காக்கிறார்கள்.‘‘ போன்ற வாசகங்களை காட்சிப்படுத்தியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் பாராளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவருமான சோனியா காந்தி போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை