Skip to main content

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சில புதிய நியமனங்கள்!

Dec 22, 2023 35 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சில புதிய நியமனங்கள்! 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சில புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



இதன்படி, பத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு பிரதம செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



குறித்த நியமனங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.



இதற்கமைய, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.



அத்துடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.



மேலும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.



நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ. சி.முஹம்மது நஃபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.



பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பி.பி.யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.



நீர்ப்பாசன அமைச்சின் புதிய செயலாளராக சமன் தர்ஷன படிகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை