கடுமையான பொருளாதார நெருக்கடி. வைத்தியசாலைகளில் குவியும் நோயாளிகள்..!
Dec 17, 2023 26 views Posted By : YarlSri TV
கடுமையான பொருளாதார நெருக்கடி. வைத்தியசாலைகளில் குவியும் நோயாளிகள்..!
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளமையே இந்த நிலைமைக்கான காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னர், இலங்கையில் 50 வீதமான நோயாளிகள் பொது வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கும் (OPD) மேலும் 50 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் சில நோயாளிகள் மேம்பட்ட சிகிச்சை முறைகளை நாடுவதும், வைத்திய பரிந்துரைகள் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை உட்கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நோயாளிகளுக்கு அத்தியாவசியமான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் "ஒன்றாக விழித்திருப்போம் என்னும் தொனிப்பொருளில் நல்லிணக்க மத்திய நிலையம் இன்றையதினம் கோப்பாயில் திறந்துவைக்கப்பட்டது!
-
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து முடிவு செய்ய மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு
-
நாளை முதல் 2 வாரம் முழு ஊரடங்கு: அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த கூட்டம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago