Skip to main content

மின்னல் தாக்கியமையே மின்வெட்டுக்கு காரணம்!..

Dec 10, 2023 28 views Posted By : YarlSri TV
Image

மின்னல் தாக்கியமையே மின்வெட்டுக்கு காரணம்!.. 

கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையே,  நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



நாடு முழுவதும் நேற்று மாலை 5.15 அளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டு, இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது.



இந்த சம்பவம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை இருவேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார். 



இதேபோல இலங்கை முழுவதும் கடந்த காலங்களில் பல மின் தடைகளை எதிர்கொண்டுள்ளமை பதிவாகியுள்ளது.



கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மின்வெட்டு மற்றும் 2021 டிசம்பரில் ஏற்பட்ட மின்வெட்டு இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களாகும்.



இவ்வாறான செயலிழப்பைத் தடுக்கும் நோக்குடன், 2018 ஆம் ஆண்டு பத்தரமுல்லையில் நிறுவப்பட்ட தேசிய கணினி கட்டுப்பாட்டு நிலையம், பூஜ்ஜிய மின் முறிவுகளை அமைப்பதன் நோக்கமாக அப்போது தெரிவிக்கப்பட்டது.



ஆனால் பெயர் வெளியிட விரும்பாத இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின்சார அத்தியட்சகர் தெரிவித்தார்.



நான்கு பில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்ட கணினி கட்டுப்பாட்டு நிலையத்தின் நோக்கமே இவ்வாறு குழிபறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இதேவேளை, நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற மின்வெட்டு தொடர்பில் ஏற்கனவே உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை