Skip to main content

சாராய போத்தலின் விலையை கூட நாணய நிதியமே தீர்மானிக்கின்றது!

Dec 09, 2023 26 views Posted By : YarlSri TV
Image

சாராய போத்தலின் விலையை கூட நாணய நிதியமே தீர்மானிக்கின்றது! 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றால், பொது வேட்பாளராகவா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராகவா என்பதை தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



கண்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.



அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மட்டுமல்லாது மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் எனக்கூறியது போல், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பதையும் அவர் கூற வேண்டும்.



ஜனாதிபதி இது சம்பந்தமான தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், அவரை ஆதரிப்பதா அல்லது வேறு தகுதியான வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கும்.



அப்போது எமது கட்சியினருக்கும் அவர்களின் நிலைப்பாட்டை தீர்மானிக்க முடியும். எது எப்படி இருந்த போதிலும் அடுத்து நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் போட்டியிடும் அளவுக்கு எமது கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.



நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம். அவர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி என்பதாலேயே அவரை ஆதரித்து வருகின்றோம்.



அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமையவே அரசாங்கம் தற்போது செயற்பட வேண்டியுள்ளது. சாராய போத்தல் ஒன்றில் விலையை கூட நாணய நிதியமே தீர்மானிக்கின்றது.



எந்த அரச நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கக்கூடாது என நாணய நிதியம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.



இதனடிப்படையில் செயற்பட்டுள்ளதால், பல வருடங்களாக பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கிய இலங்கை மின்சார சபை நஷ்டமில்லாமல் இயங்கும் நிலைமைக்கு வந்துள்ளது.



வாழக்கை செலவு அதிகம், வரி சுமை அதிகரித்துள்ளது என சிலர் முறையிடுகின்றனர். 100க்கு ஒரு வீதம் கூட வரியை அதிகரிக்காத தலைவரை போராட்டம் நடத்தி வீட்டுக்கு விரட்டியதால், தற்போது வரியை செலுத்த வேண்டியதே நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே வழி எனவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை