Skip to main content

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!...

Nov 29, 2023 31 views Posted By : YarlSri TV
Image

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!... 

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.



இந்நிகழ்வில், வடக்கு வாழ். மக்களை கலந்துக் கொள்ள யாழ். சிவில் சமூக நிறுவனங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் சிவில் சமூக நிறுவனங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தன.



விசேட அமர்வுகளாக அரசியல் களம், புலமைக்களம் மற்றும் ஆற்றுகைக்களம் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு தந்தை செல்வா அரங்கில் இடம்பெற உள்ளது.



மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலைமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல், புலமை பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகளில் மலையகத்தின் 200 வருடகால வரலாற்று பயணத்தை உணர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அடைவுகளை பெற உணர்வு ரீதியாக ஆதரவளிக்கவும், அவர்களின் முன்னெடுப்புக்களில் பங்குகேற்கவும் இந்த ஒன்று கூடல் வழி செய்யும்.



இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.



காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்றும் திருப்தியளிக்ககூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை. கல்வி, சுகாதாரம், அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.



இருப்பினும் லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவு சுவடாகவே காணப்படுகிறது.



உரிமை சார் விடயங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளல் இன்னும் பெரிய வெற்றிடமாகவே உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, மலையகத்தையும் மக்களையும் புரிந்து கொண்டுள்ளோம் எனும் ஒத்துணர்வை வெளிப்படுத்த யாழ். மாவட்டத்திலும் வடக்கிலும் உள்ள மக்கள் முக்கியமாக இளையோர் "யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்" நிகழ்வுக்கு வரவேற்கப்படுகின்றனர்.



பாடசாலைகள், பல்கலைக்கழக, உயர்கல்வி நிறுவன மாணவர்கள் நவம்பர் 30 இல் இருந்து டிசம்பர் 3 வரை இக் கண்காட்சி, பகிர்வு மற்றும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்.



கண்காட்சி (ஓவியம், டிஜிட்டல் திரை, காணொளி), மனித நூலகம், சிறுவர் நாடகங்கள், டிஜிட்டல் ஆவணக் கண்காட்சி, ஆவணப்பட திரையிடல், வாழ்வியல் பகிர்வுகள், சமூக செயற்பாட்டு பகிர்வுக்களம், புகைப்படக்கண்காட்சி, நூல் கண்காட்சி, ஊடக பகிர்வுக்களம், மலையக புள்ளிவிபர பகிர்வுத்தளம் அரசியல் பகிர்வுக்களம், புலமை பகிர்வுக்களம், ஆற்றுகைப் பகிர்வுக்களம் என்பன இடம்பெறவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை