Skip to main content

தமிழகம் பூட்டு, திமுக சாவி: அப்படினா மத்திய அரசு?

Nov 16, 2023 26 views Posted By : YarlSri TV
Image

தமிழகம் பூட்டு, திமுக சாவி: அப்படினா மத்திய அரசு? 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கன்னியாகுமரியில் புதன்கிழமை (நவ.15) பைக் பயணம் தொடங்கினார்.



udhayanidhi-stalin | சேலம் மாவட்டத்தில் டிச.17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடக்கிறது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் . கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை  தொடங்கிவைத்தார்.



இந்தப் பேரணி கன்னியாகுமரி, ஈரோடு, திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அப்போது விழாவில் பேசிய உதயநிதி, “இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நீங்கள் அனைவரும் கவனமாக பயணித்து அடுத்த மாதம் 17ஆம் தேதி சேலம் மாநாட்டு திடலுக்கு 13 நாள்களில், 188 இருசக்கர வாகனங்களில், 504 பிரச்சார மையங்களில் பிரச்சாரம் செய்து 234 சட்ட மன்ற தொகுதிகளை கடந்து வர வேண்டும்.



அப்போது கழகத் தலைவரும், நானும் உங்களை வரவேற்க காத்திருப்போம்” என்றார். தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என விமர்சித்த உதயநிதி, “தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு இதுவரை அளித்துள்ள வரி ரூ.25,000 கோடி.ஆனால் மத்திய அரசு திருப்பி அளித்த தொகை வெறும் ரூ.2000 கோடிதான்” என்றார்.



தொடர்ந்து ஒரு குட்டி கதை சொல்லத் தொடங்கிய உதயநிதி, “உங்களுகெல்லாம் ஒரு குட்டி கதை சொல்லுகிறேன். பூட்டப்பட்டிருந்த ஒரு பூட்டை கனமான சுத்தியலால் பல முறை ஓங்கி ஓங்கி அடித்தும் பூட்டை திறக்க முடியவில்லை.



பூட்டை சாவிகொண்டு  எளிதாக திறக்க முடிந்தது. கனமான சுத்தியலால் திறக்க முடியாத பூட்டை ஒரு சின்ன சாவியால் திறக்க முடிந்தது.



சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம்? எப்படி இவ்வளவு சாதுரியமாக திறந்தாய்? என்று. அதற்கு சாவி சொன்னதாம், ஆணவத்தால் தலையில் அடித்தால் பூட்டு திறக்காது. பூட்டின் இதயத்தை சாவியால் தொட்டால் போதும் பூட்டு திறந்து விடும்.



அந்த பூட்டு தான் தமிழகம்.சாவிதான் திமுக, அந்த தலைக்கனம் பிடித்த சுத்தியலால் தான் ஒன்றிய அரசு.பாஜகவால் தமிழகத்தில் என்றுமே கால் பதிக்க முடியாது” என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை