Skip to main content

தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடி தீபாவளி மது விற்பனை!..

Nov 13, 2023 24 views Posted By : YarlSri TV
Image

தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடி தீபாவளி மது விற்பனை!.. 

மது விற்பனை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.467.69 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நவ.11ஆம் தேதி மதுரையில் இருந்து ரூ.52.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது.



அடுத்து சென்னையில் ரூ.48.12 கோடியும், கோவையில் ரூ.40.20 கோடியும், திருச்சியில் ரூ.40.02 கோடியும், சேலத்தில் ரூ.39.78 கோடியும் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளது.



அடுத்து நவ.12ஆம் தேதி திருச்சியில் ரூ.55.60 கோடியும், சென்னையில் ரூ.52.98 கோடியும், மதுரையில் ரூ.51.97 கோடியும், சேலத்தில் ரூ.46.62 கோடியும், கோவையில் ரூ.39.61 கோடியும் மது விற்பனை மூலம் வசூலாகி உள்ளது.



மதுரையை பொறுத்தமட்டில் சென்னையை விட அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதாவது சென்னையில் 8882 டாஸ்மாக் கடைகளும் மதுரையில் 900 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.



தீபாவளி முடிந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் மது விற்பனை மூலம் ரூ.1000 வரை வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.



2023ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தது. முன்னதாக சனிக்கிழமை விடுமுறை தினம் ஆகும். அதேபோல் திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை