Skip to main content

சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!...

Nov 11, 2023 26 views Posted By : YarlSri TV
Image

சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!... 

முக அரசின் பொய் வழக்குகளால் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையொட்டி, சிறையில் இருந்து வெளியே வந்தார்.



சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த பாஜக கொடிக் கம்பத்தைக் கடந்த 21-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய போது, காவல்துறையினருக்கும் பாஜக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இதில், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி, தமிழகபாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.



இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 55 அடி உயரக் கொடிக்கம்பம் வைத்தால் மக்கள் கண்ணுக்குத் தெரியவே தெரியாது என்றும், ஜேசிபி வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என நீதிபதி காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினார்.



இதனிடையே, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு ரூபாய் 12,000 வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் எனப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.



இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலை நடைப் பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி-க்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது.



இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து, தமிழகபாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியே வந்தார். அவருக்கு, பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டியணைத்து வரவேற்பு கொடுத்தனர்.



சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி, தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்திற்கு வருகை தந்தார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த கைது. திமுகவின் பொய் வழக்குகளுக்கு யாரும் அஞ்சமாட்டோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை