Skip to main content

நிபந்தனை விதிக்கும் மகிந்த கட்சி..! ரணிலுக்கு புதிய சிக்கலா....?

Nov 09, 2023 25 views Posted By : YarlSri TV
Image

நிபந்தனை விதிக்கும் மகிந்த கட்சி..! ரணிலுக்கு புதிய சிக்கலா....? 

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக பொதுஜன பெரமுன தலைமையிலான குழு ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.



எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த கலந்துரையாடலை  நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



வரவு செலவுத் திட்டத்தில் தமது ஆதரவு வேண்டுமாயின் சில யோசனைகளை வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.



இதேவேளை,  வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை