Skip to main content

நாட்டின் வளங்களை விற்று பயன்களை பெறுவதே நோக்கம் என விமர்சனம் தெரிவித்த சோபித்த தேரர்

Nov 09, 2023 43 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் வளங்களை விற்று பயன்களை பெறுவதே நோக்கம் என விமர்சனம் தெரிவித்த சோபித்த தேரர் 

இலங்கையிலுள்ள வளங்களை விற்று ஏப்பமிடும் முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  அரசாங்கம் மேற்கொள்கின்றது



கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்களை விற்பனை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஒமல்பே சோபித்த தேரர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.



நாட்டின் வளங்களை விற்பதன் மூலம் தமது விருப்பங்களை நிறைவேற்றவே  அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.



மீண்டும் தமக்கு அரசியல் அதிகாரத்தை ருசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்.



நாட்டின் அனைத்து வளங்களையும் விற்று, அதன் மூலம் இலாபம் மற்றும் பயன்களை பெறுவது மாத்திரமே அவர்களின் ஒரே நோக்கம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



நுவரெலியா தபால் காரியாலம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இலங்கையின் வளங்களை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக மீதப்படுத்தி பாதுகாக்க வேண்டியது.



இதனையும் விற்று, ஏப்பமிடுவது என்பது, மிகப் பெரிய தவறாக அமையும், தபால் பணி விலகல் போராட்டத்திற்கான காரணம் என்பது மிகவும் நியாயமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை