Skip to main content

“ஒபெக்” நாடுகள் எடுத்த அதிரடி முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது!!

Apr 03, 2023 61 views Posted By : YarlSri TV
Image

“ஒபெக்” நாடுகள் எடுத்த அதிரடி முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது!! 

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்து இருப்பதால் எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. 



எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இடம்பெற்றுள்ள ஒபெக் அமைப்பின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைப்பெற்றது.



13 நாடுகள் அங்கம் வகிக்கக்கூடிய அந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் எண்ணெய் விலையை சீராக வைத்திருக்க தினசரி உற்பத்தியை 10 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 



வரும் மே மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் போதிலும் சில நாடுகள் உற்பத்தியை குறைக்க தொடங்கி உள்ளன.



இதனால் ஒபெக் கூட்டமைப்பில் இருந்து தினசரி பெறப்படும் கச்சா எண்ணெய் அளவு 11 லட்சம் பேரல் குறையும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் கடந்த மாதம் வரை 70 டாலர் விற்பனை செய்யப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 6% வரை உயர்ந்து 80 டாலரை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 



மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் நாட்டில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை