Skip to main content

இலங்கையின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

Sep 09, 2023 42 views Posted By : YarlSri TV
Image

இலங்கையின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு 

நாட்டின் பண வீக்கம் 70 வீதமாக இருந்த போது, ஒரு இலட்சம் ரூபா சம்பளத்தை ஒருவர் பெற்றால், அதன் பெறுமதி 65 ஆயிரம் ரூபாவாகவே அமையுமென்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் சாத்தியமான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.



அதேபோன்று லெபனான், கிரீஸ், சிம்பாவே, ஆர்ஜென்டினா போன்ற நாடுகள் எமது நிலையிலேயே காணப்பட்டன. எனினும், அந்த நாடுகளுக்கு 10 வருடங்கள் சென்றாலும், பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், எமது  அரசாங்கம் அந்த விடயத்தில் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உண்ணாட்டரசிறை திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.



சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,



மிக இறுக்கமான காலகட்டமொன்றிலேயே வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.



இதனை இன்னும் தாமதப்படுத்தினால், இன்று எதிர்கொள்வதை விட பாரிய நட்டமொன்றை நாம் எதிர்கொள்ள நேரும். இந்த விடயத்தை நாம் முடித்துக்கொண்டாலே, முதலீடுகளை மேற்கொள்வோமென்று ஜப்பான், சீனா போன்ற நாடுகள் எமக்கு தெரிவித்துள்ளன.



விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் அரைகுறையில் உள்ளன. அவை முழுமைப்படுத்தப்பட வேண்டும்.



சர்வதேச கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோன்று தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதும் அவசியமாக உள்ளது.



அதில் நூற்றுக்கு ஒரு பகுதியை மத்திய வங்கி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், நூற்றுக்கு 5 வீதத்தை செலுத்துவதற்கான முறைமையை நாம் ஆராய வேண்டியுள்ளது.



வங்கிகள் ஏன் அதை பொறுப்பேற்கவில்லையென்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. கடந்த காலங்களில் நூற்றூக்கு 94 வீதத்தை வங்கிகளிலிருந்தே பெற்று வந்துள்ளோம்.



வருடாந்தம் எட்டு வீத வரியை செலுத்துவதற்கும் வங்கிகள் நடவடிக்கை எடுத்தன. 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், 2020, 21,22 இன் போது நூற்றுக்கு ஆறு வீதம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குமாறு மத்திய வங்கி அறிவித்தது. கடன் பெற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.



அதனால், சில பாதிப்பு ஏற்படுமென்பது நாம் அறிந்ததே. எனினும், மேலும் நிலை மோசமாகி வங்கிக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையுமானால் கடந்த பத்து வருடத்துக்கு முன்னர் கோல்டன் கீ நிறுவனம் வீழ்ச்சி அடைந்ததோடு, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது போன்ற நிலையே ஏற்படும். அப்போது முழுமையாக செலிங்கோ நிறுவனம் வீழ்ச்சியடைந்தது.



அதுபோன்ற ஒரு மிக மோசமான நிலைக்கு நாம் மீண்டும் செல்வதா, அவ்வாறில்லா விட்டால் தற்போதைய நிலைமையை நாம் பாதுகாத்துக்கொள்வதா என்பதை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை