Skip to main content

திடீரென தீப்பற்றி எரிந்த கொள்கலன் வாகனம்!

Aug 24, 2023 32 views Posted By : YarlSri TV
Image

திடீரென தீப்பற்றி எரிந்த கொள்கலன் வாகனம்! 

கொழும்பிலிருந்து காலி நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (24) காலை காலி கலேகன பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.



இதனால் கொள்கலனிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.



கொள்கலன் வாகனம் காலி நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொண்டிருந்தபோதே தீப் பற்றி எரிந்துள்ளது.



இந்நிலையில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை