Skip to main content

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் காயம்!

Aug 21, 2023 49 views Posted By : YarlSri TV
Image

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் காயம்!  

இச்சம்பவம் நானுஓயாவில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகி உள்ளது.



நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா, தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (21) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 



அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை