Skip to main content

தீவிரவாத தாக்குதல் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்!...

Aug 21, 2023 49 views Posted By : YarlSri TV
Image

தீவிரவாத தாக்குதல் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்!... 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் ஷாவால் தாலுகா அருகே குல் மிர் காட் பகுதியில் 16 தொழிலாளர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியானது. இதில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர். 3 தொழிலாளர்கள் மாயமாகினர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயமான தொழிலாளர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது...


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை