Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்!...

Aug 21, 2023 47 views Posted By : YarlSri TV
Image

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்!... 

மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து-அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் மரணம், சென்னை குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.



ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் கவர்னர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்நிலையில் மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை