Skip to main content

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ள மற்றுமொரு உலக சாதனை

Aug 12, 2023 39 views Posted By : YarlSri TV
Image

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ள மற்றுமொரு உலக சாதனை 

பிரபல நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் வீரராக சாதனை படைத்துள்ளார்.



இதனை இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனமான ஹாப்பர் ஹெச்க்யூ அறிவித்துள்ளது.



தற்போது 600 மில்லியன் பின் தொடர்பவர்களை எட்டியுள்ள இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு 3.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுகின்றது. 



போத்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவில் அல் நாசர் குழுவில் சேர்ந்த பின்னரே இன்ஸ்டாகிராமில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாறி உள்ளார்.



சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் பின்தொடர்பவர்களின் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 



இதன்மூலம், இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று 3.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், ஜூலை மாதம் ஃபோர்ப்ஸால் உலகின் அதிக சம்பளம் வாங்கும் உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை