Skip to main content

யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!

Sep 23, 2022 51 views Posted By : YarlSri TV
Image

யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்! 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருவதாகவும் இறுதியாக வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள தமது சகோதரர்களுடன் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



காலிமுகத்திடலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெற்ற மகத்தான வெற்றி என தெரிவித்துள்ளார்.



கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது  என்றும் அவர் கூறியுள்ளார்.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கும் பிரசாரம்இ நேற்று கொழும்பை வந்தடைந்ததுடன் காலிமுகத்திடலில் பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.



மேலும் தெற்கே ஹம்பாந்தோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரசாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் இதுவரை சுமார் 500000 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.



எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை