Skip to main content

புலிப் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி கிடையாது – சரத் வீரசேகர

Sep 15, 2022 56 views Posted By : YarlSri TV
Image

புலிப் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி கிடையாது – சரத் வீரசேகர 

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.





தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும்இ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.



இந்நிலையிலேயே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இலங்கை பௌத்த – சிங்கள நாடு எனவும் இந்த நாட்டுக்குள்தான் வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளதாகவும் வடக்குஇ கிழக்கு வேறு நாடு அல்ல என்றும் அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவையும் அல்ல என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.



வடக்குஇ கிழக்கில் புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது எனஅவர் தெரிவித்துள்ளார். 



தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் எனவும் சட்டங்களை மீறினால் அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை