Skip to main content

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

Jun 08, 2022 65 views Posted By : YarlSri TV
Image

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் 

அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.



அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காகவே புதிய விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



புதிய திட்டம்



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச நிறுவனங்களின் வருடாந்த மற்றும் அரையாண்டு அறிக்கைகளை நாடாளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு E-Book வடிவில் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்



 



அத்துடன், பல்வேறு படிவங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒரு படிவம் வழங்கப்பட்டு WhatsApp போன்ற சமூக ஊடக வழிமுறைகளை பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு படிவங்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பெருந்தொகை செலவு



 



ஆண்டுதோறும் பல்வேறு படிவங்கள் மற்றும் அறிக்கைகளுக்கான காகிதத்திற்காக பெருந்தொகை செலவு ஏற்படுகிறது.



அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்



 



புதிய திட்டத்தின் கீழ், அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் திரைகளில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.



இந்த திட்டத்திற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை