Skip to main content

சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!

Jun 07, 2022 87 views Posted By : YarlSri TV
Image

சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன! 

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத்தமிழர்கள் தஞ்சம் கோரி பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.



அந்த வகையில் தமிழ்நாட்டிற்கும் புகலிடம் கோரி சென்றனர். அவ்வாறு சென்ற ஈழத்தமிழர்கள் பலர் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.



ஈழத்தமிழர் போராட்டம்



சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!



தம்மை மீண்டும் ஈழத்திற்கு அனுப்புமாறு கோரி சிலரும், வேறு சிலர் முகாமிலிருந்து தம்மை விடுத்து சுதந்திரமாக குடும்பத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகினறனர்.



அந்த வகையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, தமது கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்காத பட்சத்தில் சிலர் உயிரைமாய்க்கும் முயற்சிலும் ஈடுபட்டிருந்தனர்.





இருப்பினும் இதுவரை எந்த விடிவும் கிட்டதா நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.



உயிர் மாய்க்கும் முயற்சி



சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!



இவ்வாறு தமிழ சிறப்பு முகாம்களில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத்தமிழர் தொடர்பில் தமிழக சட்டத்தரணி ஜோன்சன் எமது ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.



அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சிறப்பு முகாம்கள் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்ததன் பிரதான நோக்கம், போராளிகளான ஈழத்தமிழர்களையும், சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழர்களையும் பிரிக்கும் நோக்கிலேயே சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.





அத்துடன் அன்றைய காலகட்டத்தில் போராளிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இவ்வாறான சிறப்பு முகாம், வேலூர் கோட்டையில் 1990 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழ கட்சியினால் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை