Skip to main content

யாழ்.போதனாவின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான எஸ். சிவரூபனுக்கு அச்சுறுத்தல்!

Oct 22, 2022 79 views Posted By : YarlSri TV
Image

யாழ்.போதனாவின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான எஸ். சிவரூபனுக்கு அச்சுறுத்தல்! 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



குறித்த வைத்தியர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய கால பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை, பாலியல் வன்புணர்வு, சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார்.



குறித்த வழக்குகளில் எதிரியாக உள்ளவர்கள் தெற்கில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளின் முக்கிய சாட்சியாக உள்ள சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர். எஸ். சிவரூபனும் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்காக எதிரிகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும் போது, எதிரியுடன் சாட்சியத்தையும் ஒரே சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுகின்றனர்.



இந்நிலையில் கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எதிரிகளுடன் சாட்சியமான தன்னையும் ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவதனால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு வைத்தியர் கொண்டு வந்தார்.



அதனை அடுத்து வழக்குகளின் முக்கியமான சாட்சியமான சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது.



பளை வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகரான சின்னையா சிவரூபன் 2019ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.



விடுதலைப் புலிகளது மீள் உருவாக்கம் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரது கைதினை தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேர் கைதானர்கள்.



இவருடன் கைதான 7 முன்னாள் போராளிகளும் இரண்டு வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டு;க்கள் ஏதும் சுமத்தப்படாது அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.



இந்நிலையில் மருத்துவர் சிவரூபனின் விடுதலை திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுவதாக குடும்பத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை