Skip to main content

அரிசி இறக்குமதியால் நெல் ஆலை உரிமையாளர்கள் பாதிப்பு

Oct 21, 2022 79 views Posted By : YarlSri TV
Image

அரிசி இறக்குமதியால் நெல் ஆலை உரிமையாளர்கள் பாதிப்பு 

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள்ளுர் விவசயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்த நெல் ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் வவுனியா மாவட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கையில் கடந்த அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்த ஆலை உரிமையார்கள் அதனை அரிசியாக்கி விற்பனை செய்ய முற்படும் போது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதனால் அலை உரிமையாளர்கள் மாத்திரமின்றி விவசாயிகளும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.



விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லை தற்போது அரிசி ஆலை உரிமையார்கள் குறித்த விலைக்கு விற்பனை செய்யமுடியாமையில் அரிசி ஆலைகளில் அரிசி தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக கால போக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் நெல் ஆலை உரிமையார்கள் நெல்லை கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலை ஏற்படும் இது விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



எனவே அரசாங்கம் உள்ளுர் விவசாயத்தினை மேம்படுத்தவும் உள்ளுர் வர்த்தகர்களை நட்டமடையாது பாதுகாக்கவும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை தடை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை