Skip to main content

தொடர்ந்தும் உதவுவதாக அமெரிக்கா உறுதி!

Oct 20, 2022 83 views Posted By : YarlSri TV
Image

தொடர்ந்தும் உதவுவதாக அமெரிக்கா உறுதி! 

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.



தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சந்தித்தார்.



இதன்போதே இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டிய அவர் தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே சரியான நபர் என்றும் அவருக்கு ஆதரவாக ஒரு சக்தி இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.



இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் அமெரிக்க அரசாங்கம் சகலவிதமான ஆதரவையும் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் முயற்சிகளை வரவேற்பதாகவும் உதவிச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில். இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக பாராட்டுக்களையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.



இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை