Skip to main content

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலை குறைப்பு!

Oct 18, 2022 81 views Posted By : YarlSri TV
Image

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் விலை குறைப்பு! 

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.



மேலும் தெரிவித்த அவர் அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.



அதற்கமைய பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும், நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.



எவ்வாறாயினும் பால்மா விலை குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலைமைகளை தொடர்பில் வர்த்தக அமைச்சர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக விளக்கமளிப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை