Skip to main content

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி!

Oct 17, 2022 82 views Posted By : YarlSri TV
Image

தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி! 

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.



ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது.



10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங்



ஹொங்கொங் மற்றும் தாய்வான் விவகாரம், கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



இதன்போது கருத்து தெரிவித்த அவர் 'ஹொங்கொங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹொங்கொங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது.



இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல் தாய்வான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.



தாய்வானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். இருப்பினும் தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்த ஒரு போதும் தயங்க மாட்டோம்.



கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சீனாவின் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சீனாவைப் பொறுத்தவரை மக்களும், அவர்களின் உயிரும் நலனும் தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது.



பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை மூலம் சீனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும்' என கூறினார்.



இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின்ஜனாதிபதியாகத் ஸி ஜின்பிங் தொடர்ந்து 3 ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை