Skip to main content

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டது!

Oct 14, 2022 59 views Posted By : YarlSri TV
Image

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டது! 

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.



குறித்த கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



குறித்த கப்பல் 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றி வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.



எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் 10 நாட்களுக்குள் மேலும் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.



அந்தந்த கப்பல்களில் தலா 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் போதுமான நிலக்கரி கையிருப்பு நாட்டில் இருப்பதாக நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதனிடையே அவசரகால கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அழைப்பு வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.



இதற்காக பல நிறுவனங்கள் ஏற்கனவே தமது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை