Skip to main content

தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!

Oct 05, 2022 97 views Posted By : YarlSri TV
Image

தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடிப்பு!  

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநாட்டு விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் நாடு வடகொரியா. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.



அந்த வகையில் கடந்த வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை நேற்று சோதனை செய்தது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான்பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்துள்ளது. 



மேலும் இந்த ஏவுகணை ஆயிரம் கிலோமீட்டர் உயரத்திற்கு பறந்துள்ளது எனவும் அது சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ள உயரத்தை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புபடையினர் உஷார் படுத்தப்பட்டனர்.



இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது.



இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அதேவேளை தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.



இதில் தென்கொரியா ஏவிய ஒரு ஏவுகணை தோல்வியடைந்தது. அந்த ஏவுகணை வடகொரியாவின் கடற்கரை நகரமான கங்க்னியங் என்ற பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்தது. விமாப்படை தளத்தில் ஏவுகணை விழுந்து வெடித்தது.



ஏவுகணை விழுந்து வெடித்ததில் விமானப்படை தளத்தில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.



வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா நடத்திய ஏவுகணை சோதனை சொந்தநாட்டு விமானப்படை தளத்திற்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை