Skip to main content

QR Code முறை அறிமுகம்!

Oct 03, 2022 67 views Posted By : YarlSri TV
Image

QR Code முறை அறிமுகம்! 

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக  QR Code முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.



சமுர்த்தி பயனாளிகளைத் தவிர அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் நபர்களையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.



அதன்படி இந்த அமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்களும் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் ஏனைய குடும்பங்களையும் இது இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் நோக்கம் அந்த நலன்புரி நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை