Skip to main content

அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை!

Apr 23, 2022 65 views Posted By : YarlSri TV
Image

அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை! 

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய உள்தணிக்கை  என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், "நெடுஞ்சாலைத்துறையில் குறைபாடுகளை களைய “உள்தணிக்கை (Internal Audit)" என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.



சமீபத்திய ஒன் இண்டியா (One India) இணையதள சேவையில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சில சாலைப்பணிகள் நிறைவு செய்யப்படுவதற்கு முன்னரே ஒப்பந்தத் தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதாக செய்திகள் வெளிவந்தது. அச்செய்தியினை தொடர்ந்து கண்காணிப்புப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திருப்பூர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் சேலம் ஆகியோரின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட 2 கோட்டப் பொறியாளர்கள், 2 உதவிக் கோட்டப் பொறியாளர்கள், 2 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 2 கோட்டக் கணக்கர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆர்.கோதண்டராமன் விசாரணை அலுவலராக நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.



இதுபோன்ற நிகழ்வுகள் வேறு எங்கும் நடைபெற்றுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டதன்பேரில், “உள்தணிக்கை (Internal Audit)” என்ற புதிய நடைமுறை நெடுஞ்சாலைத்துறையில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகைச் சார்ந்த 9 வட்டங்கள், நபார்டு மற்றும் கிராமச் சாலை அலகைச் சார்ந்த 4 வட்டங்களில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும், பிற அலகுகளான - தேசிய நெடுஞ்சாலைகள், திட்டங்கள், - பெருநகரம் (மெட்ரோ ), ' நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், ' திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, - தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம்-II, * சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டம்சார்ந்த கண்காணிப்புப் பொறியாளர்கள் தலைமையிலான குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில், உள்தணிக்கை செய்து அறிக்கையினை முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை சென்னை அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை