Skip to main content

கீவில் உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு!

Apr 10, 2022 107 views Posted By : YarlSri TV
Image

கீவில் உக்ரைன் அதிபருடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு! 

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. தற்போது புதினின் 2 மகள்களான மரியா வொரொன்ட்சோவா, கேடரினா டிகோனோவா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்துள்ளது. அவர்களது சொத்துகளை முடக்கி உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில், புதின் மகள்கள் மீது இங்கிலாந்து அரசும் பொருளாதார தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 1,200 தனி நபர்கள், நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



உக்ரைனின் கிழக்கில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பத்து மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும் என உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.



இந்த தாழ்வாரங்கள் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் உள்ள பல நகரங்களை விட்டு வெளியேற மக்களை அனுமதிக்கும் என ஏ.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.



போர் நடந்து வரும் சூழ்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைனுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை