Skip to main content

10 நிமிடத்தில் எப்படி உணவு டெலிவரி முடியும்? சொமோட்டோவின் புதிய அறிவிப்புக்கு ஏற்பட்ட சிக்கல்!

Mar 25, 2022 60 views Posted By : YarlSri TV
Image

10 நிமிடத்தில் எப்படி உணவு டெலிவரி முடியும்? சொமோட்டோவின் புதிய அறிவிப்புக்கு ஏற்பட்ட சிக்கல்! 

உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டோ 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்த தகவலுக்கு விளக்கம் கேட்டுள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.



உலகம் முழுவதுமே ஆன்லைன் உணவு டெலிவரியில் முன்னனிலை வகிக்கும், சொமோட்டோ நிறுவனம். சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது பேசும் பொருளாக மாறியுள்ளது.



பொதுவாக உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் பல சிரமத்தை எதிர்கொண்டு தான் இந்த வேலையை செய்து வருகின்றனர். ஆனாலும் உணவு டெலிவரியில் ஏதாவது ஒரு பிரச்சினை எழுவதாக சொமோட்டா நிறுவனத்திற்கு புகார்கள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன.



எப்படி சாத்தியம்?



இந்த நிலையில், இதனை தடுக்க zomato நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இந்த அறிவிப்புக்கு மக்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.



இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்ததை அடுத்து, zomato நிறுவனர் தீபேந்தர் விளக்கம் கொடுத்துள்ளார்.



 



அதில், 10 நிமிட டெலிவரி என்பது அனைத்து வகையான உணவுக்கும் இல்லை. பிரியாணி உள்ளிட்ட ஒரு சில உணவுகளுக்கும் மட்டும் தான் இந்த நடைமுறையில் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.



அதேபோல் சரியான நேரத்தில் உணவு கொடுத்தாலும் ஊக்கத் தொகை கிடையாது என தெரிவித்திருந்தார்.



இதனிடையே, இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சொமோட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.   


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை