Skip to main content

உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள்-அடுத்த கட்டம்!.

Mar 24, 2022 92 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள்-அடுத்த கட்டம்!. 

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி அழிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.



உக்ரைனியப் படைகள் ஏற்கனவே ஜேர்மன் இராணுவமான Bundeswehr இடமிருந்து 1,000 டாங்கி அழிப்பு ஆயுதங்களையும் (Anti-Tank Weapons), 500 ஸ்டிங்கர் வகை வான்வழி ஏவுகணைகளையும் (Stinger-type surface-to-air missile launchers) பெற்றுள்ளன.



ஜேர்மனி உறுதியளித்த 2,700 ஏவுகணைகளில் இருந்து சுமார் 500 ஸ்ட்ரெலா (Strela surface-to-air missiles) ஏவுகணைகளை வழங்கியுள்ளது.



இந்நிலையில், 2000 கூடுதலாக டாங்கி அழிப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என ஜேர்மன் ஊடகங்களில் பரவும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அநாமதேயமாக இருக்க விரும்பிய நாடாளுமன்ற ஆதாரம் கூறியுள்ளது.



"தற்போதைய சூழ்நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆயுதங்களை வழங்குபவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம்" என்று ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



"இது எங்களை பெருமைப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனுக்கு உதவ நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை