Skip to main content

டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு

May 28, 2022 87 views Posted By : YarlSri TV
Image

டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு 

தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில் திருக்குறள் டெனிசு மொழிக்கு மொழி பெயர்த்து நூல் வெளியீட்டு விழா செய்யப்பட்டுள்ளது.



இவ்விழாவானது 21.05.2022 அன்று Sena Palace,Agerskellet 26, 8920Randers என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.



உலகப்புகழ் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.அத்துல் கமீட் பங்குபற்றி சிறப்புரையாற்றி நூலினை வெளியிட்டுவைத்தார்.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



 



சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை நிறுவனர் ஆசிரியர் பொன்னம்பலம்.முருகவேள் பூநகரியான் நிகழ்விற்குத் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றியிருந்தார்.



மணிக்குரல் கே.எசு. இராயன் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழமைபோல் தொகுத்து வழங்கியிருந்தார். இளையவர்கள் பெரியளவில் இணைந்து செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. மங்கள விளக்கேற்றல், அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றை ஆசிரியர் இணையர் சிவனேசுவரி சிவராசா நிகழ்த்தியிருந்தார்.





வரவேற்பு நடனம், இளையோரின் கவிதையும், காட்சியும் என்ற தமிழ்ப்பெரியர்கள் பற்றிய நிகழ்வு, திருக்குறள் ஓதும் நிகழ்வுகள், திருக்குறள்; கருத்துப் பாடல்களுக்கான ஆடற்கலைகளும் இடம்பெற்றன. திருக்குறளும் வாழ்வியலும் என்ற தலைப்பில் கருணாகரா கதிரேசனின் உரையும் இடம்பெற்றது.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



 



நூல் வெளியீட்டினை தொடர்ந்து திருக்குறள் டெனிசு மொழிபெயர்ப்பாளர் இணையர் மயான சுடீன் ஈசாக் நூலினை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் ஆதவனின் சிறப்புரையும் இடம்பெற்றது.



எழுத்தாளர் நக்கீரன் மகளின் உரையும் இடம்பெற்றது. கவிதாயினி இணையர் வேதா இணங்காதிலகத்தின் கவிதையும் இடம்பெற்றது. மாணவர்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலினை அச்வி பிரபாகரன் சிறப்பாக வழங்கியிருந்தார்.





வரவேற்பு நடனம், நடன ஆசிரியை இணையர் நிரேகா என்டன்நீன் நெறியாளுகையில் மாணவிகள் சாருயா, துச்யந்தன், ரயிகா, கயேந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர். இசையும், கவியும், காட்சியும் நிகழ்வினை ஆசிரியர் இணையர் சிவனேசுவரி சிவராசா சிறப்பாக நெறியாளுகை செய்திருந்தார்.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



 



ஆடற்கலை நிகழ்வுகளை நடன ஆசிரியை கலைமகள் யோகராசாவின் மாணவிகளான யுலியா யேசுதாசன், லிசானா சிவா,அபிராமி மன்மதன் ஆகியோரும் ,கணேச நாட்டிய சேத்திர ஆசிரியை இணையர் சசிதேவி றீசவின் மாணவிகளும் வழங்கியிருந்தனர்.



திருக்குறள் ஓதும் நிகழ்வினை சிந்துயா துச்யந்தன, சந்தோச் துச்யந்தன் தேயச்வி பாலாயி, காரத்திகன் இரகுநாதன், சிரேயா மதிவதனன், டவீனா உமாகாந்தன், சச்வின் சிறிகந்தராச், அச்மியா ராயன், பிரணவிகா சிறிகந்தராயா, இலக்சன் சத்தியமூர்தி, அபிராமி நிர்மலன், றோபிகா றொபின்சன், யனுசா உமாகாந்தன், அபிசனா நிர்மலன், திலக்சன் சத்தியமூர்த்தி, சர்வின் சதீசுவரன் ஆகிய மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர்.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



நூல் வெளியீடு



முதல்நூலினை கோசான்சு மாநகராட்சி உறுப்பினர் திரு.பிரதீப் ரபீந்திரநாத் பெற்றுக்கொண்டு சிறப்பித்தார். அவ்வாறே,சிறப்புப்பிரதியை மாநகராட்சி உறுப்பினர் யெரி(Glady Lucksman Gerad) பெற்றுக்கொண்டார்.



இணையர் தர்மப்பிரியா துச்யந்தன், துசான் கணேசமூர்த்தி(செந்தில்), துவாரகன் கந்தசாமி, இணையர் சுடீன் ஈசாக், திருக்குறள் ஆங்கிலமொழி பெயர்ப்பு உதவியாளர் மற்றும் நூல் வடிவமைப்பாளர் அண்ணன் ராமமூர்த்தி பாலாயி, தொடர்ந்து நிகழ்விலிருந்த பலரும் நூலினை பெற்றுக்கொண்டு திருக்குறள் நூலினையும் தமிழ்மொழியினையும் சிறப்புச்செய்தார்கள்.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



 



தமிழகத்திலிருந்து தமிழ் மகிழ்நன், சத்தியராச், தேனிசை செல்லப்பா, அறிவுமதி, சீமான், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்புரைகள் வழங்கி சிறப்பித்திருந்தனர். நிறைவாக நன்றியுரையினை தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் நாகலிங்கம் கயேந்திரன் வழங்கி விழாவினை நிறைவு செய்தார்.



திருக்குறள் நூலானது கிறித்தவ வேதாகம நூலிற்கு(வைபிள்) அடுத்து அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பெருமைக்குரிய நூலாகத் தமிழில் இருப்பது திருக்குறளாகும். இது தமிழர்களிடம் இல்லங்கள் தோறும் இருப்பதோடு,அவர் தம்வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நூலாகத் திருக்குறள் திகழ்கின்றது. அது இதுவரை நிகழவில்லை என்றே கூறலாம்.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



திருக்குறள் நூலானது 1730களில் யோசப் பொசுகி (வீரமாமுனிவர்) வினால் ஐரோப்பிய மொழியான இலத்தீன் மொழியில் தொடங்கி பண நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.



அந்தவகையில் இந்தியமொழிகளில் 52 முறையும், ஆசியமொழிகளில் 14 தடவைகளும், ஐரோப்பிய மொழிகளில் இறுதியாக 69 ஆவது முறை நிகழ்ந்திருந்தது.





21.05.2022 அன்று டென்மார்க் நாட்டில் டென்மார்க் தமிழ், டெனிசு சமூக இலக்கிய இணைவகம் டெனிசு மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியீடு செய்யப்பட்டதுடன், ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் நூலானது 70 முறை மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது என்ற பெருமையினை பெறுகின்றது.



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



 



43 முறை ஆங்கிலமொழியிலும், 9 முறை பிரஞ்சு மொழியிலும், 6 தடவைகள் யேர்மன் மொழியான டொச்மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் 1990 ஆம் ஆண்டில் பாசல் மாநிலத்தில் ஓம் அமைப்பால் இதுவரையில் இறுதியாக டொச்மொழியில் (யேர்மன் மொழியில்) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றது.



மலேசியத்தமிழறிஞர் அமரர் மணிவெள்ளையனாரினால் தொகுக்கப்பட்ட தொகுப்பினை இங்கு இணைக்கின்றோம். 



பிறமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் 



உலகின் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அற இலக்கியம் திருக்குறள்



திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)



டென்மார்க் நாட்டில் திருக்குறள் நூல் டெனிசு மொழியில் வெளியீடு (Photos)


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை