Skip to main content

இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர்

May 18, 2022 63 views Posted By : YarlSri TV
Image

இந்த இரு நாடுகளையும் நம்ப தயாராக இல்லை! துருக்கி அதிபர் 

நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை நம்ப தயாராக இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.



இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.



ரஷ்ய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பு வேண்டி தாங்கள் நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன.



ஆனால் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது.



இந்நிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நாடுகளுக்கு துருக்கி எப்போதும் ஒப்புதல் தராது என அந்த நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது,



நோட்டோ விண்ணப்பம் தொடர்பாக தங்களை நம்ப வைப்பதற்காக ஸ்வீடிஷ் மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் தலைநகர் அங்காராவிற்கு வந்து தேவையில்லாமல் எங்களை சோர்வடைய வைக்கக்கூடாது.



இந்த இருநாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்பு குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை இல்லாத போது எவ்வாறு அவர்களை நம்புவது? ஸ்வீடனை ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு. அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருக்கின்றனர்.



இவ்வாறு துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை