Skip to main content

நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை செயல்படுத்தும் ரஷ்யா : உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

May 09, 2022 96 views Posted By : YarlSri TV
Image

நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை செயல்படுத்தும் ரஷ்யா : உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு  

"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செயல்படுத்துவதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, குற்றம் சாட்டியுள்ளார்.



இரண்டாம் உலகப் போரை நினைவுகூரும் உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார், ரஷ்ய இராணுவம் தனது நாட்டின் மீது படையெடுப்பின் போது நாஜிகளின் "அட்டூழியங்களை" பிரதிபலிப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.



"உக்ரைனில் இருள் திரும்பியுள்ளது, அது மீண்டும் கருப்பு மற்றும் வெள்ளையாக மாறிவிட்டது," என்று அவர் தனது காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



குறித்த காணொளியில் உள்ள காட்சிகள் உக்ரைன் ஜனாதிபதி அழிக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களின் பின்னணியில் இருப்பதைக் காட்டுகின்றது.



இந்த காணொயில் இரண்டாம் உலகப் போரின் காப்பகக் காட்சிகளும், ரஷ்யாவின் படையெடுப்பின் கருப்பு-வெள்ளை காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.



பெப்ரவரி பிற்பகுதியில் உக்ரைன் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, ​​​​டொஸ்கோ அதன் செயல்பாடு நாட்டை "நாசிஃபை" செய்யும் பகுதியாக இருந்தது.



ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நாஜி ஜெர்மனியின் தோல்வியின் 77வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, "1945 இல் இருந்ததைப் போல, வெற்றி நமதே" என்று தனது சொந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.



திங்கட்கிழமை ரஷ்யாவின் வெற்றி தின நினைவு தினத்தை முன்னிட்டு ரஷ்யா தனது தாக்குதல்களை முடுக்கிவிடக்கூடும் என்று உக்ரைன் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாடசாலை ஒன்றில் ரஷ்யா வெடிகுண்டு வீசியதில் 60 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை