Skip to main content

மின்சார கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்

Apr 30, 2022 84 views Posted By : YarlSri TV
Image

மின்சார கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல் 

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



மின்சார சபையின் வருமானம், செலவினை அடிப்படையாக கொண்டே மின் கட்டணம் அதிகரிக்கப்படும். மின் கட்டணம் மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்கத்திடம் அது சமர்ப்பிக்கப்படும்.



அரசாங்கம் ஆராய்ந்த பின்னர் மக்களிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே அதிகரிக்கப்படும். எனினும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.



எனினும் எரிவாயு, எரிபொருள், பால்மா போன்று நள்ளிரவுகளில் விலைகளை அதிகரித்து மக்களுக்கு சுமையை அதிகரிக்க மாட்டோம். இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை